இந்த சட்டம் என்பது பொதுவாக நிரந்தர

இந்த சட்டம் என்பது பொதுவாக நிரந்தர குடியுரிமை சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. நிரந்தர குடியுரிமை பெறாதவர்கள் காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை பெறுவதையும் இது தடுக்கிறது. காஷ்மீரிலுள்ள, அசையும் சொத்துக்களை பிற மாநிலத்தவர்கள் வாங்க முடியாது. அரசு வேலைவாய்ப்பையும் பெற முடியாது ஸ்காலர்ஷிப் மற்றும் உதவிகளையும் பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் பெற முடியாது. காஷ்மீர் பெண்கள் பிற மாநில ஆண்களை மணமுடித்தால் அந்த பெண்களின் சிறப்பு உரிமைகள் பறி போய்விடும் என்ற அம்சம் சட்டத்தில் உள்ளது. ஆயினும் 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments